பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- கூண்டு முறை / கொட்டகை முறை
- ஆழ்கூள முறை
ஆழ்கூள முறை
இம்முறை உலகம் முழுவதம் பின்பற்றப்படும் முறை ஆகும்.
பயன்கள்
பயன்கள்
- மூலதனம் குறைவு.
- சுகாதாரமானது, அதோடு கோழிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
- இதில் பயன்படுத்தப்படும் கூளமானது ரிஃபோஃபிளேவின் மற்றும் விட்டமின் பி 12 ஆகிய சத்துக்களை கோழிக்கு அளிக்கிறது.
- நோய்க் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் எளிது.
- உற்பத்தித் திறனை அதிகப்படுத்துகிறது.
- நெல் உமி, உலர்ந்த இலைகள், நறுக்கிய வைக்கோல் மற்றும் வேர்க்கடலை தழைகள் போன்ற கிடைக்கும்பொருட்களை கூளமாக உபயோகிப்பதால் இடுபொருள் செலவு குறைவு.
ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை
- கூளங்கள் அதிக ஈரம்படாமல் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
- குறிப்பிட்ட அளவுக் கோழிகளையே வளர்க்க முடியும்.
- நல்லக் காற்று வசதி இருக்கவேண்டும்.
- கூளங்கள் வாரத்திற்கொரு முறை மாற்றப்படவேண்டும். ஏதேனும் ஈரமான கூளங்கள் இருப்பின் அவற்றிற்குப் பதில் புதிய உலர்ந்த கூளங்கள் போடப்படவேண்டும்.
- ஒரு சரிவிகிதத் தீவனம் கோழிகளுக்குக் கொடுக்கப்படவேண்டும்.
- கோடைக்காலத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே கூளங்கள் போடப்பட்டு தயார் செய்யப்படவேண்டும். அப்போது தான் சூட்டில் பாக்டீரியாக்கள் நன்கு செயல்புரிந்து கூளங்கள் தயாராகும்.
- தண்ணீர் வைக்கும் இடங்களில் நீர்க்கூளத்தின் மீது சிந்தி ஈரமாக்கிவிடாதவாறு எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொ
தனிமையில் வளர்த்தல்
வணிக ரீதியில் அளவில் வைப்பதை விடப் பெரிய பண்ணைகளே அதிக லாபம் தரக்கூடியவை, முட்டை உற்பத்திக்கு 2000 பறவைகள் கொண்ட பண்ணை அமைப்பு சிறந்தது. இறைச்சிக்கென வளர்க்கப்படும் கோழிகள் வாரத்திற்கு 250 குஞ்சுகள் புதிதாக சேர்க்கப்படவேண்டும்.கோழிகள்
கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்கவேண்டும். சில நாட்களான இளம் பெட்டைக் குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு வளர்ந்து ஓடக்கூடிய நிலையில் இருக்கலாம்.ள்ளவேண்டும். கோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை
இந்திய அரசு, பெங்களூர், மும்பை, புவனேஸ்வர் மற்றும் டெல்ஹி ஆகிய நான்கு இடங்களில் முட்டை மற்றும் இறைச்சிக் கோழிக்கான மாதிரி சோதனை ஆய்வகங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம் வருடந்தோறும் பல இனக்கோழிகளை இவ்விடங்களில் வைத்துச் சோதனை செய்து முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் சூழ்நிலைக்கேற்றவாறு இனங்களைத் தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.
இருக்க வேண்டிய எண்ணிக்கை
கோழிகளில் இறப்பு, தேவையற்ற / பயனற்ற கோழிகளின் நீக்கம் போக ஒவ்வொரு பகுதியிலும் 1000 கோழிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது 1000 கோழிகளுக்கு 1100 கோழிகள் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். ஒரு நாள் வயதான இளம் கோழிக்குஞ்சுகள் 1100 வளரும் இளம் குஞ்சுகள் 1050, தயார் நிலையில் குஞ்சுகள் / கோழிகள் 1000 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும். இறைச்சிக்கான கோழிகளில் 6-7 வார வயதில் 250 கோழிகள் சந்தைக்கு அனுப்பத் தயார் நிலையில் இருக்கவேண்டும்-
கொட்டகை முறை
கோழி ஒன்றுக்கு 0.6-0.75 சதுர அஎ அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும். இம்முறைதான் நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத் தடுத்து ஓர் அறைக்கு 300 குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம்.
பயன்கள்
- ஒரு குறிப்பிட்ட குறைந்தளவு இடத்தில் நிறைய கோழிகளை வளர்க்கலாம்.
- பதிவேடுகளை சரியாகப் பராமரிக்க முடியும்.
- சரியான வளர்ச்சியுற்ற உற்பத்திக் குறைந்த கோழிகளைப் பிரித்தெடுத்தல் எளிது.
- இம்முறையில் தான் கோழிகள் அதன் முட்டை மற்றும் ஊண் உண்ணுதலைத் தடுக்க முடியும்.
- இம்முறையில் சுத்தமான முட்டைகள் பெறப்படுகின்றன.
- அழுத்தக் காரணிகள் குறைவு.
- இரத்தக்கழிச்சல், குடற்புழுக்கள் போன்ற ஒட்டுண்ணிகளின் நோய்த்தாக்குதல் கட்டுப்படுத்த முடியும்.
- தீவனங்கள் அதிகம் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
- மிதவெப்பமண்டலப் பகுதிகளில் கோழி வளர்ப்பிற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் கோழிகளை அமிழ்ந்தவை அல்லது மருந்தை தூவுவதற்கோ பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் அமிழ்த்துதல் நல்லதல்ல. மேலும் கோழியின் தலையை நனைப்பதும் தவிர்க்கப்படவேண்டும்.
- மேலும் குஞ்சுகளை வளர்ந்த கோழிகளிடமிருந்து பிரித்து வளர்த்தல், கொட்டகை மற்றும் அனைத்து சாதனங்களையும் சுத்தமாக வைத்திருத்தல், பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்காமல் இருத்தல், இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்துதல், எலி மற்றும் பிற பறவைகளின் நடமாட்டத்தைப் பண்ணையிலிருந்து நீக்குதல் போன்ற முறையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அதோடு பயனற்ற பறவைகளை நீக்குதல் போன்றவையும் நல்ல பலன் தரக்கூடிய பராமரிப்பு முறைகளாகும்.
-
கொல்லைப்புற கோழி வளர்ப்பு
எல்லாக் கோழிப் பண்ணைகளுக்கும் இந்தியாவின் கொல்லைப்புற கோழி வளர்ப்பே முன்னுதாரணமாகத் திகழ்கிறது. இது கொல்லைப்புற முறையில கலிங்கா ப்ரெளன், மும்பை தேசி, ரோட் ஐலேன் ரெட், காரி நிர்பீக் போன்ற இனங்களைப் பயன்படுத்தலாம். கொல்லைப்புற வளர்ப்பு முறையில் பல வகை உண்டு. இடவசதி போதுமானதாக இருந்தாலும், தீவனப் பராமரிப்பு முறையாக இருப்பதில்லை.கொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை
பொருட்கள்கலவை 1 (சதவிகிதம்) கலவை 11 (சதவிகிதம்) கடலைப்புண்ணாக்கு 52 60 எள்ளுப் புண்ணாக்கு 20 - உப்பின்றி உலர்த்திய மீன் (கருவாடு) 20 32 அரிசி / கோதுமை / மரவள்ளிக்கிழங்கு குருணை 4 4 கோழிகளுக்கான தாதுக்கள் 4 4 மொத்தம் 100 100 -
கோழி இனங்கள்
கடந்த இருபதாண்டுகளில் இந்தியா இறைச்சிக் கோழி உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. உயர் இரக கோழிக்குஞ்சுகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன. வருடத்திற்கு 41.06 பில்லியன் முட்டைகளும் 1000 மில்லியன் இறைச்சிக் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்தியா முட்டை உற்பத்தியியல் 4வது இடமும் இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5வது இடமும் வகிக்கின்றது. தற்போது இறைச்சிக்கோழி உற்பத்தி ஆண்டு வளர்ச்சியில் 15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. எனவே கோழி வளர்ப்பு தேசியக் கொள்கையில் முக்கியப் பங்கு வகிப்பதோடு எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்பை வழங்கும் தொழிலாகவும் இருக்கிறது.
இறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்
- முட்டைக்கோழி வளர்ப்பைவிட இறைச்சிக் கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு.
- வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள் மட்டுமே.
- அதிக அளவுக் கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும்.
- இறைச்சிக் கோழிகளில் தீவனத்தை நல்ல இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம்.
- குறைந்த முதலீட்டில் விரைவில் அதிக இலாபம்.
- ஆட்டு இறைச்சியைக் காட்டிலும் கோழி இறைச்சி விலை மலிவாக இருப்பதால் அதன் தேவை அதிகமாக உள்ளது.
-
கோழி இனங்களின் வகைப்பாடு
1.அமெரிக்க இனங்கள்
எ.கா புதிய ஹேம்ப்ளையர், வெள்ளை விளை மொத்ராக், சிவப்பு ரோட்ஜலேன், வையான்டேட் II
2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள்
இந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி செய்யக்கூடியவை.
3.ஆங்கில இனங்கள்
இவ்வினங்களில் சதைப்பற்று அதிகம்
எ.கா ஆஸ்டிராலார்ட், கார்னிஸ், சுஸெக்ஸ்
4. ஆசிய இனங்கள்
பெரிய உடலுடன் வலிமையான எலும்புகளையும் அதிக சிறகுகளையும் பெற்றிருக்கும். முட்டையிலும் திறன் குறைவு.
5. இந்திய இனங்கள்
எ.கா ஆசில் (சண்டைக்கோழிகள்) சிட்லகாங், கடக்னாத்பர்ஸா
வியாபார இறைச்சிக் கேரழி இனங்கள்
காப், ஹப்பர்டு, லோமேன், அனக் 2000, ஏவியன் 34, ஸ்டார்பிரா, சேம்ராட்.
முட்டையிட ஏற்ற இனங்கள்
எ.கா பிவி 300, போவான்ஸ், ஹைலின், ஹச் மற்றும் என் நிக், டீகால் லொஹ்மேன்.
இறைச்சிக் கோழி
இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை. ஆண், பெண் என இரு வகைக் கோழிகளும் 6-8 வார வயது வரை வளர்க்கப்பட்டு இறைச்சிக்ாக அனுப்பப்படுகின்றன.
வளரும் பருவக் கோழிகள்
முட்டை உற்பத்திக்காக வளர்க்கப்படும் 9-20 வார வயது கொண்ட கோழிகள் வளரும் பருவக் கோழிகள் ஆகும்.
முட்டையிடும் கோழிகள்
முட்டை உற்பத்தி செய்யும் 21லிருந்து 72 வார வயது வரை உள்ளக் கோழிகள் முட்டையிடும் கோழிகள் எனப்படும்.
கோழிக்குஞ்சு இனங்கள்
கோழிக்குஞ்சுகளும் கோழிகள் போல இறைச்சி மற்றும் முட்டைத் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கென வளர்க்கப்படும் இனங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, அதனிடமிருந்து பெறப்படும் முட்டைகள் அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் பெறப் பயன்படுகின்றன. இறைச்சிக் கோழிகள் வறுக்க, பொரிக்கப் பயன்படுபவை என பல வைககள் உள்ளன. இவ்வகைக் கோழிகள் விரைவில் வளரக்கூடிய இனங்களான செயற்கையான வெள்ளை ஆண் இனங்கள், செயற்கை வெள்ளை பெய் இனங்கள் நிறமுடைய வெள்ளை இனங்கள்.
நம்நாட்டு இனங்கள்
சாதாரணமாக கிராமங்களில் வளர்க்கப்படும் தேசிய இனக் கோழிகள் நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. நம் நாட்டில் காணப்படும் சில வகைக் கோழிகள் லெகார்ன், சஸக்ஸ், பிளைமாத் ராக் இனங்களைப் போன்று தோன்றினாலும் இவை அளவிலும் முட்டை உற்பத்தியிலும் சற்றுக் குறைந்தவை. நம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.
இந்தியாவில் வரையறுக்கப்படாத சில இனங்கள் உள்ளன. இவைக் குறைந்த உற்பத்தித் திறனே பெற்றுள்ளன. உள்ளூர் இனங்களான டெனிஸ், காஷ்மீர், ஃபேடரெல்லா, டில்ரி, பர்ஸா, டெல்லிச்சேரி, டான்கி, நிக்கோரை, காலஹஸ்தி போன்ற சில தூய இனங்களே உள்ளன., பல வகை கலப்பு இனங்கள் வளரும் இடங்களுக்குத் தகுந்தவாறு பல நிறங்களில் காணப்படுகின்றன. இவற்றில் அசீல், சிட்டாகாங், லாங்ஸான், பிரம்மா இரத்தம் போன்றவை நல்ல உற்பத்தியுள்ள வளாக்கக்கூடிய இனங்களாகும்.
அசீல்
இக்கோழிகள் இதன் ஆற்றலுக்கும், சண்டைத் தன்மைக்கும், புகழ் பெற்றவை. இவை ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் இராஜஸ்தானில் காணப்படுகிறது. நன்கறியப்பட்ட இனங்களான (பொன்னிறச்சிவப்பு), யார்க்கின் (கருப்பு சிகப்பு), நியூரி 89 (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கறுப்பு, வெள்ளை) டீக்கர் (செம்பழுப்பு) ரெசா (இளம் சிவப்பு) போன்றவை குறைந்த உற்பத்தித் திறனே கொண்டாலும் தரம் மிக்கவை. நன்கு குஞ்சு பொரிக்கும் திறன் பெற்றவை. கொண்டை சிறிதாக தலையுடன் நன்கு அமைந்திருக்கும். கோழித் தாடி, காதுகள் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். கண்கள் பெரிதாகவும் நல்ல பார்வைத்திறனுடன் இருக்கும். கழுத்து நீண்டு, சதையற்றதாக இருக்கும், உடலமைப்பு உருண்டையாகவும், மார்பகம் அகன்றும் முதுகு நேராகவும் உடலுடன் நெருக்கமாக அமைந்திருக்கும். மார்புப் பகுதியில் அதிக இறக்கைகள் இருக்காது. இறக்கைகள் கடினமாகவும் சிறகுத் துகளின்றிக் காணப்படும். வால் சிறியதாக சரிந்தும் கால்கள் நேராக, வலிமையானதாக சிறிது இடைவெளி விட்டுக் காணப்படும். சராசரி உடல் எடையளவு கிலோகிராமில் சேவல் 4-5, பெட்டைக் கோழி 34-, சேவல் குஞ்சு 3-5,4-5 பெட்டைக்குஞ்சு 2-5,3-5
காரக்னாத்
இதன் உண்மைப் பெயர் காலம்சி எனப்படுகிறது. கருப்புச் சதையாலான கிண்ணம் போன்ற அமைப்பு என்பது இதன் பொருள் முட்கைள் சிறிது பழுப்பு நிறம் கொண்டவை. ஒரு நாள் வயதுக் குஞ்சு நீலம் கலந்த நிறத்தில் பின்பகுதியில் ஒழுங்கற்ற கோடுகளுடன் இருக்கும். பெரிய கோழியின் இறக்கை வெள்ளைநிறத்திலிருந்து தங்க நிறம் வரை பல நிறங்களில் வேறுபட்டுக் காணப்படும். தோல், பாதம், அலகு விரல்கள் சிலேட்டு நிறத்தில் காணப்படும். கொண்டை, தாடி, நாக்கு ஆகியவை கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். மேல் மூச்சுக் குழல், வயிற்றுக் காற்றரைகள், மார்புக் கூடு போன்ற உட்புற உறுப்புகள் கருமைக் கலந்த நிறத்துடன் இருக்கும். மூளை, மூளை உறைகள், நரம்புகள், எலும்புக் கூட்டுத் தசைகள், போன்றவையும் கருமைக் கலந்து காணப்படும். மெலனின் படிவதால் இரத்தம் கூட நிறமிகளைப் பெற்று கருஞ்சவப்பு நிறத்தில் தான் இருக்கும். சாதாரணக் கோழி வருடத்திற்கு 80 முட்டைகள் இடும். இக்கோழி இதன் இயற்கைச் சூழலில் நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருக்கும். ஆனால் கூண்டில் அடைத்து வளர்க்கும் போது வாத நோயின் தாக்கம் அதிகம் காணப்படுகிறது.
புதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு
- குஞ்சுகளை வெளியிலிருந்து வாங்கும் போது முன்கூட்டியே கொட்டகைகளைத் தயார் செய்து விடவேண்டும்.
- குஞ்சுகள் வந்தவுடன் வாகனத்தை உள்ளே செல்ல அனுமதிக்காமல் நுழைவாயிலேயே நிறுத்தி குஞ்சுகளை எடுத்துக் கொள்ளுதல் நலம்.
- கொதிக்க வைத்து ஆற வைக்கப்பட்ட தண்ணீர் தயாராக இருக்கவேண்டும். 8 கிராம் குளுக்கோஸ், 0.51 எதிர் உயிர்ப்பொருள் அல்லது பாக்டீரிய எதிர்ப்பொருளை ஒரு லிட்டர் நீரில் கலந்து எலக்ரோலைட் விட்டமின் கலவை போன்றவற்றையும் சிறிதளவு சேர்த்து முதல் நாள் குஞ்சுகளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டும்.
- எதிர்ப்பொருள்களும், விட்டமின்களும் 3-5 நாட்களுக்கு தொடரலாம்.
- வெப்பக் கூட்டினுள் குஞ்சுகளை அனுப்புமுன் மருந்து கலந்த நீரை அளிக்கவேண்டும்.
- ஏதேனும் விரிப்பைப் போட்டு அதில் சிறிது தீனியைப் போட்டு குஞ்சுகளை பொறுக்கவிடுவேண்டும். அப்போது குஞ்சுகள் ஒவ்வொன்றும் சரியான அளவு 40-48 கிராம் எடை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
- குஞ்சுகளை எண்ணிக் கொள்ளவேண்டும். அவற்றின் அலகை நீரில் நனைத்துப் பின் வெப்ப அடைப்பானுக்குள் விடவேண்டும்.
- குஞ்சுகள் சுறுசுறுப்புடன் நல்ல ஆரோக்கியமாக தீவனம் எடுக்கிறதா என்பதை அடிக்கடிப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
- ஆரோக்கியமற்ற, சரியான தீவனம் உட்கொள்ளாத, குறைபாடு உடையக் குஞ்சுகளை வாங்கியவரிடம் தந்து விட்டு அவற்றுக்குப் பதில் புதிய குஞ்சுகளை வாங்கிக் கொள்ளவேண்டும்.
- சீமெண்ணெய் அல்லது நிலக்கரி அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் மணல் போட்டு சூடாக்கி அதக் கூண்டிற்குள் பரப்புவதன் மூலமும் வெப்பத்தை உருவாக்கலாம்.
- சூடான சுருள் மூலமாகவும் வெப்பத்தை வழங்கலாம். கோழிக்குஞ்சுகளுக்கு எட்டாமல் சற்று உயரத்தில் வைக்கவேண்டும்.
- குஞ்சுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வெப்பம் போதுமானதா என்று அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். வாரத்தில் 35 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அளிக்கப்படவேண்டும். பின்பு வாரத்திற்கு 5 டிகிரி செல்சியஸ் எனக் குறைத்துக் கொள்ளலாம்.
- ஒரு தெர்மாமீட்டரை கூண்டுக்குள் பொருத்தி வைப்பதன் மூலம் வெப்பத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
- குஞ்சுகளை வெப்பக்கூண்டிற்குள் அவ்வப்போது மேற்பார்வையிடவேண்டும். அவை விளக்குகளுக்கு அருகாமையில் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு இருந்தால் அளிக்கப்பட்ட வெப்பம் போதுமானதாக இல்லை என்று அர்த்தம். மேலும் விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
- குஞ்சுகள் விளக்கு எல்லையை விட்டுத் தள்ளிச் சென்றால் வெப்பம் அதிகமாக இருக்கலாம். எனவே வெப்பக் கூண்டைப் பரிசோதித்து வெப்பம் அதிகமாக இருந்தால் விளக்குகளை நீக்கலாம் அல்லது சற்று உயர்த்தி வைக்கலாம்.
- கொடுக்கப்பட்ட வெப்பநிலை சரியாக இருந்தால் குஞ்சுகள் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் நகர்ந்து தீவனமுன்னும்.
- மேலும் சில குஞ்சுகள் தலையை ஒரு புறம் சாயத்துக் கொண்டு ஓய்வு எடுக்கும். இவ்வாறு இருந்தால் அது நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை எனத் தெரிந்து கொள்ளலாம்.
- ஆரம்பத்தில் வெளிச்சமானது 22 மணி நேரம் விளக்கு எரியவிடப்படும். இரவில் ஒரு அல்லது அரை மணி நேரம் மட்டுமே அணைக்கப்படுகிறது. பிறகு 3வது வாரத்தில் இரவில் மட்டுமே விளக்குகள் எரியவிடப்படுகின்றன. கோடைக்காலமாக இருந்தால் 1 வாரமும் குளிர்க்காலங்களில் 3 வாரம் வரையிலும் நீட்டிக்கப்படும்.
வளரும் குஞ்சுகள் பராமரிப்பு
6 வார வயதிற்குப் பின் செயற்கை வெப்பமும் வெப்பக்கூடுகளையும் நீக்கி விடலாம். பயன்படாத குஞ்சுகளை நீக்கி விடவேண்டும். ஒரு குஞ்சுக்கு 0.095-0.19 மீ 2 என்ற அளவு இடவசதி இருக்கவேண்டும். 8 வார வயதில் இருந்து வளரும் கோழிகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கவேண்டும். கலப்புத் தீவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய (பொருட்கள்) தீவனங்களாவன.
தீவனப் பொருட்கள் அளவு (சதவிகிதம்) மஞ்சள் சோளம் 43 கடலைப்புண்ணாக்கு 8 எள்ளுப் புண்ணாக்கு 5 மீன் துகள் உப்பின்றி உலர்த்தப்பட்ட மீன் 6 அரிசி (பாலிஸ் செய்யப்பட்டது) 16 கோதுமைத் தவிடு 20 உப்பு 0.25 தாதுக் கலவை 1.75 மொத்தம் 100.00
வளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை
வயது (வாரங்களில்)உணவுத் தேவை (கிராம் / கோழி / நாள்) 10 53.0 11 58.0 12 60 13 60 14 60 15 62 16 62 17 65 18 70 19 75 20 75 நீர் மற்றும் தீவனம்
தீவனத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையிலும், தரையிலிருந்து சற்று உயரத்திலும் வைக்கவேண்டும். வளரும் குஞ்சுகளுக்கான தீவனத் தொட்டி 10 செ.மீ உயரத்தில் வைக்கவேண்டும். குழாய் முறையில் அளிப்பதாக இருந்தால் 25 கிலோ எடையுள்ள 50 குஞ்சுகளுக்கு ஒரு குழாய் என்ற அளவில் வழங்கலாம். தண்ணீர் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்கவேண்டும். 2.25 செ.மீ ஒரு குஞ்சுக்கு என்ற வீதத்தில் நீர் அளிக்கவேண்டும்.
நோய்க்கட்டுப்பாடு
பரிந்துரைக்கப்பட்ட அட்டவணைப்படி தடுப்பூசிகளும், குடற்புழுநீக்க மருந்துகளும் அளிக்கவேண்டும்.
அலகு நீக்கம் செய்தல்
அலகை நீக்குவதால் தீவன விரயம் மற்றும் தன் இனத்தைத் தானே உண்ணுதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம். மின்சார அலகு நீக்கி கொண்டு நீக்குவது நல்லது. மேல் அலகில் மூன்றில் ஒருபங்கும் கீடை அலகில் சிறிதளவு மட்டும் நீக்கவேண்டும். இது குஞ்சு பொரித்து, ஒரு வாரக் காலத்திற்குள் செய்து விடவேண்டும். மீண்டும் ஒரு முறை முட்டியிடுவதற்கு முட்டையிடும் கூண்டிற்குள் விடுமுன் 16 வார வயதில் அலகு நீக்கம் செய்யவேண்டும். கொல்லைப்புற முறையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அலகு நீக்கம் செய்தல் கூடாது. நன்கு தெரிந்த பயிற்சி பெற்ற ஒருவர் மட்டுமே இதைச் செய்யவேண்டும்.
அலகு நீக்கம்
கொண்டை நீக்கம்
கொண்டையானது தொங்கிக் கொண்டோ, பெரியதாகவோ இருக்கும் இனமாக இருந்தால் ஒரு நாள் வயதிற்குள் கொண்டை நீக்கம் செய்து விடவேண்டும்.
ஒளி
முட்டை உற்பத்திக்கென வளர்க்கப்படும் கோழிகளுக்கு இரவில் வெளிச்சம் தேவைப்படுவதில்லை.
இந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்
இனங்கள்6வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) 7வது வாரத்தில் உடல் எடை (கிராமில்) உணவை மாற்றும் தன்மை வாழ்திறன் (சதவீதம்) எல்ஏ 77 1300 1600 2.3 98-99 காரிபிரோ 91 1650 2100 1.94-2.2 97-98 காரிபிரோ (பலநிறம் கலந்தது) 1600 2000 1.9-2.1 97-98 காரிபிரோ நேக்டு நெக் 1650 2000 1.9-2.0 97-98 வார்னா 1800 1800 2.1-2.25 97
எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
ReplyDeleteCountry chicken
Aseel chicken
Chittang chicken
Kadaknath Chicken
ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
suresh A- 9655783673. Tirunelveli (Dist)