கோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம்!! சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை
கிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த
நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில்
இலாபத்தை பெற விவசாயிகளுக்கு ஒரு மாற்றுத் துணை தொழிலாக இருக்கிறது பண்ணை கோழி வளர்ப்பு
பண்ணை கோழி வளர்ப்பு :
கூகுளின் உதவியுடன் தேடியதில், பண்ணைக் கோழிகளை வளர்க்கும் முறைகளை இன்னும்
பல தளங்கள் கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை அமைப்பது குறித்த தகவல்கள்
போன்றவற்றை விரிவாக கொடுத்திருந்தாலும் தொழிற்களம் மூலமாக உங்களுக்கு புதிய
சில தகவல்களை கேட்டறிந்து அளிக்க முயற்சித்துள்ளேன்
நண்பர் ஒருவர் முகனூல் வழியாக கேட்டதற்கினங்க இந்த பதிவை பதிகிறேன். இது
போன்று பலரும் ஆலோசனைகளை கேட்பதை ஒட்டி விரைவாக தகவல்கள் திரட்டி தர ஒரு
புது ஆர்வம் ஒட்டிக்கொண்டு மகிழ்விக்கிறது..
நன்றி நண்பா!!!
பண்ணைக்கோழி வளர்ப்பு ::
நிச்சயமாக கோழிப்பண்ணை என்பது ஒரு நல்ல இலாபகரமாண தொழில்தான். காரணம் கோழியின் கறி, முட்டை மட்டுமல்ல அதன் கழிவுகளும் கூட நல்ல விலைக்கு விற்பனை செய்துவிடலாம் என்பதே ஆகும்.
நல்ல சீதோசனமும், ஆலோசனைக்கு நல்ல மருத்துவரையும் உங்கள் பக்கம் ஒத்துழைக்கும்படி அமைந்துவிட்டால் அடுத்த 90 நாட்களில் நீங்கள் இலட்சாதிபதியாக மாறிவிடுவீர்கள்.. ஆம், கோழி வளர்ப்பு நல்ல இலாபம் தரக்கூடியது தான்.
முதலில் புதிதாக கோழிப்பண்ணை அமைக்க எண்ணம் உள்ளவர்கள் அடிப்படையில் அமைந்த சில விசயங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
கோழி வளர்ப்பு கறிக்கோழி (பிராய்லர்), நாட்டுக்கோழி, முட்டைக்கோழி என தனித்தனி வளர்ப்பு முறை உள்ளது. இதில் உங்களுக்கு ஏற்புடையது எது என்பதை உங்கள் முதலீட்டு தொகையை வைத்து முடிவு செய்யுங்கள்.
கோழிவளர்ப்பில் கறிக்காக வளர்க்கப்படுபவை, முட்டைக்காக வளர்க்கப்படுபவை என்று இரு வேறு பண்ணைகள் உண்டு.
பெறும்பாலும் பலரும் கறிக்கோழி வளர்ப்பதையே குறைந்தம் முதலீடு என்பதற்காக தேர்வு செய்கின் றனர்.
காரணம், முட்டைக்காக பண்ணை அமைக்க மற்றும் பாதுகாக்க செய்யப்படும் செலவுகள்
கறிக்கோழி பண்ணைகள் அமைப்பதை காட்டிலும் கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும்
என்பதால் கொஞ்சம் அனுபவம் பெற்ற பெரிய நிறுவனங்களே முட்டைக்கோழி
வளர்ப்பில் அதிக இலாபம் பார்க்கின்றன.
முட்டைக்கோழி வளர்ப்பு :
கூண்டு முறையில் வளர்க்கப்படும் முட்டைகோழி வளர்ப்பில் முதல் 10 வாரங்கள்
செட்டில் வளர்க்கப்படும். ( கொட்டகை போன்ற அமைப்பு ) பிறகு செல்களில்
அடைத்து முட்டையிடும் பருவத்தில் வாரம் ஆறு முட்டை வீதமாக கிட்டத்தட்ட 52
வாரங்களுக்கு ஒவ்வொரு கோழியும் முட்டையிடும். பருவம் முடிந்ததும் அந்த
கோழிகள் கறிக்காக கொல்லப்பட்டு விடும்.
இவ்வாறு, முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டை இருவிதமாக
வளர்க்கப்படும். நல்ல உயர் ரக சேவல்களிலிருந்து செமன் எடுக்கப்பட்டு அதை
கோழிகளுக்குள் இன்செமனேசன் செய்து குஞ்சு பொறிக்கத் தகுந்த முட்டைகள்
ஒருபுறம் உற்பத்தி செய்யப்படும். இன்செமனேசன் செய்யாத முட்டைகள் தனியாக
விற்பனைக்கு அனுப்படுகிறது.
அவ்வாறு இன்செமனேசன் செய்யப்பட்ட முட்டைகள் பண்ணைகளில் தனியே தரம்
பிரிக்கப்பட்டும் இயந்திரத்தின் உதவியுடன் குஞ்சுகளாக பொறிக்கப்பட்டு
தனியே சிறு பண்ணைகளுக்கு "கோழி வளர்ப்பிற்க்காக விற்பனை செய்யப்படுகிறது."
இவ்வாறான பெரிய நிறுவனங்கள் தான் பயனீர், சுகுணா, சாந்தி, எஸ்.ஆர்.எஸ் போன்றவைகள்.
பொங்களூர், கோவை, பல்லடம் போன்ற தென்மாவட்டங்களில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளது. நாமக்கல் தமிழகத்தின் மிக முக்கியமான நகரமாக இருந்து வருகிறது. இங்கே முட்டை, கறிக்கோழிகளின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
கறிக்கோழி வளர்ப்பு :
மேற்கண்ட நிறுவனங்களில் குஞ்சுகள் விற்பனைக்கு கிடைக்கும். சாதாரணமாக " பிராய்லர் இன கோழிகள் குஞ்சொன்றுக்கு ரூ.16 முதல் 22 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதுவே நாட்டுக்கோழி இனம் என்றால் ரூ 8 முதல் 13 ரூபாய் வரை கிடைக்கும்
பிராய்லர் இன கறீக்கோழிகள் முழுமையாக 90 நாட்கள் வளர்ந்த பிறகு
விற்பனைக்கு தயாராகிவிடும். அதுவரை தீவனங்கள் போட்டு நன்றாக
பராமரிக்கவேண்டும், நாள் தவறாமல் கோழிகளின் நிலைகளை பரிசோதிக்க வேண்டும்,
தேவையான பயோசெக்யூரிட்டிகளை கவனிக்க வேண்டும், மாடால்டியை கட்டுப்படுத்த
வேண்டும்.
கோழிக்களுக்கன மருந்தை ஊசிகளிலும் உணவிலும் சரியாக கலந்து கொடுக்க வேண்டும்.
கருவாடு, சோளம், சோயா, கடற்சிப்பி, அரிசிஎண்ணை, போன்றவைகள் அரவை இயந்திரத்தில் கொடுத்து அரைத்து கோழிகளுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.
அதேபோல் செட்டில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தரையில் உமியை பரப்பி வைத்து
வெப்பத்தை குறைக்க ஏது செய்ய வேண்டும், இரு நாட்களுக்கு ஒருமுறையேனும்
அந்த உமிகளை களைத்துவிட்டு கழிவுகள் வழியே லார்வாக்கள் தோன்றாமல் பார்த்துக்கொள்ளவும்.
(Feeds) பொறுத்த வரையில் ஸ்டார்ட்டர் ஃபீட், கிரெளத் ஃபீட், ரெகுரல்
என வகைப்படுத்தப்பட்டு குஞ்சு பருவம், வளர் பருவம் என உணவளிக்கப்படுகிறது
90 நாட்கள் வளர்ந்த கோழிகளை வியாபாரிகள் நேரடியாக பண்ணைக்கு வந்து
வாங்கி சென்று விடுவார்கள். பண்ணை விலையை செய்தித் தாள்களில் தினந்தோறும்
தெரிந்துகொள்ளலாம்.
முக்கியமாக கோழிகளின் எடை நன்கு பராமரிக்கப்பட வேண்டும். 90 நாட்களுக்கு
பிறகு இவற்றின் எடை கூடுதலாகாது என்பதால் உங்கள் சந்தை வாய்ப்பை கெட்டியாக
பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு கோழியும் கிட்டத்தட்ட 2 கிலோவுக்கும் அதிகமாக எடை
பிடித்திருக்கும். கிலோ ஒன்றுக்கு ரூ.52 முதல் விலை கிடைக்கும் என்பதால்
ரூ.22க்கு வாங்கப்படும் குஞ்சுகள் ரூ.120 வரைக்கும் விற்று இலாபம் பெற
செய்கிறது.
கோழித்தீவனங்கள், ஆட்கள் சம்பளம் போக நிச்சயமாக கனிசமான இலாபத்தை இது உங்களுக்கு கொடுக்கும்.
ஆரம்பகட்டத்தில் புதிதாக தொழில்துவங்க நினைப்பவர்கள் நேரடியாக குஞ்சுகளை
வாங்கி வளர்க்காமல், பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் குஞ்சுகளை
வாங்கி வலர்ப்பது பாதுகாப்பான வழிமுறையாக இருக்கும். காரணம், அவ்வாறு
ஒப்பந்த அடிப்படையில் குஞ்சுகளை வளர்க்கும் போது தேவையான தீவங்கள்,
மருத்துவர்கள் பராமரிப்பு நடைமுறைகள் என அனைத்தையுமே அந்த ஒப்பந்த
நிறுவனக்கள் அளித்துவிடும் என்பதால் கூடுதலான உங்கள் உழைப்பும், பண்ணைக்கான
முதலீடும் மட்டுமே உங்களுடைய செலவாக இருக்கும். முதல் ஆறுமாதங்கள் புதிதாக
தொழில் துவங்குபவர்கள் இவ்வாறாக ஒப்பந்தம் செய்துகொள்வது மிகவும் நன்று.
மேற்கண்ட நிறுவனங்களே ஒப்பந்த அடிப்படியிலும் கோழிகளை தருகிறது.
இருப்பினும், அவ்வாறக ஒப்பந்தம் செய்து தொழில்செய்யும் பொழுது
கோழிவளர்ப்பில் அதிக அனுபவத்தை பெறலாமே தவிர இலாபத்தை எதிர்பார்க்க
முடியாது.
கோழிக்கழிவுகள் ஒரு நல்ல உறம் என்பதால் அதன் கழிவுகள் கூட டன் ஒன்றுக்கு ரூ.600 முதல் 800 வரை விலை போகிறது
ஆக, வாழையை போல கோழியும் அனைத்தையும் பணமாக்கிறது.
மிகவும் முக்கியமானது சந்தை வாய்ப்பு
முட்டைக்கோழி வளர்ப்பவர்கள் முட்டைகளை தரம் பிரித்து விற்பனைக்கு
அன்னன்னைக்கே அனுப்பிவிடுவது நல்லது. உடைந்த முட்டைகளை பேக்கரி, ஹோட்டல்
வியாபாரிகள் வந்து நேரடியாக வாங்கிசொல்கிறார்கள்(?) எனவே அதையும் விற்பனை
செய்துவிடலாம் என்ற கொசுறு செய்தியையும் பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள்
தருகிறார்கள்.
உங்கள் பண்ணை அமைந்துள்ள சுற்றளவில் உள்ள கடைகளுக்கு நேரடியாக சென்று
உங்கள் கோழியின் தரத்தையும், விலையையும் கூறி ஆர்டர்களை எடுத்துவிட்டால்
இன்னும் அதிகமான இலாபம் உங்களுக்கு கிடைக்கும்.
கோழி இறைச்சிக்கு என்றுமே சந்தைவாய்ப்பு அதிகமாக இருப்பதால், அதிக
உயர் ரக கோழிகளை உற்பனை செய்து அதன் முட்டை மற்றும் இறைச்சிகளை
பதப்படுத்தி எக்ஸ்போர்ட் செய்யலாம்.
உயர் ரக கோழிகள் என்பவைகள் கிரேன்ட் பேரண்ட் இன்செமனேசன் செய்யப்பட்ட பேரன்ட் கோழிகளாக இருக்கும். இவற்றை சோதித்து வாங்குவது நல்லது.
அதேபோலவே நாட்டுக்கோழி உற்பத்தியும் நடைபெறுகிறது. இதன் வளர்ப்பு காலம்
முதல் 45 நாட்கள் முடிந்ததிலிருந்தே விற்பனைக்கு தயாராகிவிடும். எவ்வளவு
அதிக நாட்கள் வளர்க்கிறோமோ அவ்வளவு லாபத்தை நாட்டுக்கோழிகள் தரும்.
பண்ணை அமைக்கும்பொழுது செட்டின் அளவு கோழிகளின் கொள்ளளவின் மூன்று மடங்கு வரை அதிகமாக உளாத்த ஏதுவாக அமைத்துக்கொள்க.
உங்கள் பகுதியில் உள்ள மாவட்ட தொழில்வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தங்களுடைய பிராஜெக்ட் வேல்யூ கொடுத்து கடன் உதவி பெற அதிக வாய்ப்புகளை அரசு தருகிறது. மானியத்துடன் கூடிய கடன் உதவி என்பதால் கொஞ்சம் தாமதித்தாலும் தொடர்ந்தி தக்க ஆவணங்களுடன் முயற்சியுங்கள்..
வாழ்த்துகள்!!!
- தொழிற்களம் அருணேஸ்
உதவிய தளங்கள் :
இன்னும் விரிவாக சொல்லும்.
http://sreekaviyafarms.blogspot.in/2013/04/blog-post_14.htmlhttp://poultry.tamilnadufarms.com/tamil/
http://www.vinavu.com/2010/10/16/suguna-broiler/
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=11558
http://www.alibaba.com/product-gs/585503928/chicken_poultry_design.html
விவசாயத்துடன் கறிக்கோழி வளர்ப்பை ஒரு துணைத்தொழிலாக மேற்கொண்டு வந்த தமிழக விவசாயிகள், கடந்த இரு மாத காலமாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலுள்ள கறிக்கோழி உற்பத்தி செய்யும் விவசாயிகள், இறந்த கோழிகளை சுகுணா நிறுவனத்தின் முன்பாகப் போட்டு, அந்நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் தமது 10 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஏறத்தாழ 2 இலட்சம் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தமிழகத்தில் இப்போராட்டம் தற்போது ஓய்ந்திருப்பதைப் போலத் தோன்றினாலும், அது நீறுபூத்த நெருப்பாகவே நீடிக்கிறது.
1980-களின் நடுவில் அரசின் கோழி ஆராய்ச்சி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பை விவசாயிகளிடம் அறிமுப்படுத்தின. அரசின் கோழிக் குஞ்சு உற்பத்தி நிறுவனங்களிடம் நேரடியாகக் குஞ்சுகளை வாங்கி 100 முதல் 1000 கோழிகள் வரை கொண்ட சிறிய பண்ணைகளை உருவாக்கி, தமிழகத்தில் பல்லடம், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, வேலூர் முதலான பகுதிகளில் விவசாயிகளால் கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டன. வளர்ந்த கோழிகளை விவசாயிகளிடமிருந்து கறிக்கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக வாங்கிக்கொண்டனர். இதே காலத்தில் அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் துணை நிறுவனமான தமிழ்நாடு கோழி வளர்ச்சி கழகம் (டாப்கோ-TAPCO) கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்தி ஆதரவளித்தது.
ஆனால் 1990-களில் தனியார்மய-தாராளமயக் கொள்கை திணிக்கப்பட்ட பிறகு, அரசுக்கு கோழி வளர்ப்பில் என்ன வேலை என உலகவங்கி உருட்டி மிரட்டத் தொடங்கியதும், உலக வங்கியின் கட்டளைப்படி, நிதி ஒதுக்கீட்டை அரசு நிறுத்தியதால் விவசாயிகளுக்குத் தேவையான குஞ்சுகளை அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. அரசு திட்டமிட்டே, அரசு நிறுவனங்களை ஒழித்தது. இலட்சக்கணக்கில் எந்திர சாதனங்களுக்குச் செலவாகும் என்பதால், கறிக்கோழி குஞ்சுகளை விவசாயிகளால் உற்பத்தி செய்யவும் முடியாது. இதன் விளைவாக, தனியார் கோழிக்குஞ்சு உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் கறிக்கோழி வியாபாரத்தில் ஈடுபட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்களின் கை ஓங்க ஆரம்பித்தது. கோழிக்குஞ்சுகளுக்காக தனியார் நிறுவனங்களை விவசாயிகள் முற்றாகச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. மேலும், விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புத் தொழிலைக் கைவிட இயலாத நிலைமையையும், கறிக்கோழி வளர்ப்புக் கொட்டகைக்கான விவசாயிகளின் கடன் சுமையையும் பயன்படுத்திக் கொண்டு தனியார் கறிக்கோழி நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தை விவசாயிகள் மீது திணித்தன.
கறிக்கோழி ஒப்பந்த விவசாயத்தில், ஒப்பந்த விவசாயத்தை நடத்தும் நிறுவனம் கோழிக் குஞ்சு, தீவனம், மருந்து மற்றும் மருத்துவ சேவையுடன் ஆலோசனைகளையும் கொடுக்கும். கோழிக் குஞ்சு வளர்ப்பிற்கான கொட்டகை, குடிநீர், மின்சாரம் மற்றும் உழைப்பைக் கொண்டு கறிக்கோழிகளை விவசாயிகள் வளர்க்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலியைக் (உயிருள்ள கோழிக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 1.50 முதல் அதிகபட்சமாக 2.50 வரை) கொடுத்துவிட்டு கோழிகளைக் கொள்முதல் செய்து கொள்ளும். இந்த ஒப்பந்த விவசாயத்தை வெங்கடேஸ்வரா, பயனீர், சாந்தி பார்சூன், சுகுணா போன்று 20-க்கும் மேற்பட்ட தனியார் பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் தொடக்க காலத்தில் 500, 1000 கோழிகளை வளர்க்க ஒப்பந்தம் போட்டு விவசாயிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. அடுத்ததாக, குறைந்த பட்சமாக 5000 கறிக்கோழிகள் வளர்க்க வேண்டும் என்று நிபந்தனை போட்டும், நிறுவனத்தினர் சொல்லும் விதத்தில் கொட்டகை அமைத்துப் பராமரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டும் பல லட்சங்கள் முதலீடு செய்ய வாய்ப்பில்லாத சிறு விவசாயிகளை வெளியேற்றின. இன்னொருபக்கம் கறிக் கோழி வியாபாரத்தில் ஈடுபடும் பெரும் வியாபாரிகளுக்குப் பல சலுகைகள் கொடுத்து தன் பிடியில் கொண்டு வந்து ஏகபோகத்தை நிறுவியுள்ளன.
மேலும் இந்நிறுவனங்கள், கறிக்கோழி ஒருங்கிணைப்புக் கமிட்டி (Broiler Co-ordination Committee -BCC) என்ற கூட்டமைப்பை உருவாக்கி தன்னிச்சையாக கறிக்கோழியின் விலையைத் தீர்மானிக்கின்றன. இந்தக் கூட்டமைப்பு அவ்வப்பொழுது அறிவிக்கும் கறிக்கோழிக்கான பண்ணை விலை என்பது விவசாயிகளுக்குக் கொடுக்கும் விலை அல்ல; விவசாயிகளுக்கு கோழி வளர்ப்புக்கான கூலி மட்டும்தான் கொடுக்கப்படுகிறது. இந்தக் கமிட்டி அறிவிக்கும் பண்ணை விலையை அடிப்படையாகக் கொண்டுதான் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகள் நுகர்வோருக்கான கறிக்கோழி விலையைத் தீர்மானிக்கின்றனர்.
இப்படிச் செயல்படும் ஏகபோக நிறுவனங்களில் ஒன்றுதான், சுகுணா. இது, கோயம்புத்துரை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்று இந்நிறுவனம் 11 மாநிலங்களில் 8,000 கிராமங்களில் சுமார் 20,000 விவசாயிகளிடம் கறிகோழி ஒப்பந்த விவசாயத்தை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நேரடியான சில்லறை விற்பனை இறைச்சிக் கடைகளை (சுகுணா டெய்லி ஃபிரஷ்) திறந்து வருகிறது. ஒப்பந்த விவசாயத்தின் மூலம் வாரம் ஒன்றுக்கு 80 லட்சம் கறிக்கோழிகளைச் சந்தைக்குக் கொண்டு வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு வர்த்தகம் 3200 கோடி ரூபாய்களாகும். ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தைப் பிடித்துள்ள இந்நிறுவனம், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.,
கோழி உட்கொள்ளும் தீவனம் மற்றும் அதன் எடை வளர்ச்சியின் அடிப்படையில்தான் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலி கொடுக்கப்படுகிறது. அதாவது, ஒரு கோழி 4 கிலோ தீனி தின்று 40-45 நாட்களுக்குள் 2 கிலோ ஏறினால் அதிகபட்சமாக ரூ 5.00 (கிலோவுக்கு 2.50 ரூ என்ற வீதத்தில் ) கூலியா கொடுக்கப்படுகிறது. ஆனால், கறிக்கோழியின் எடை அதிகரிக்க ஒரு கிலோவுக்கு ஏறத்தாழ ரூ.6.00 வரை விவசாயிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது. விலைவாசியோ பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும், கடந்த பல ஆண்டுகளாக கோழி வளர்ப்போருக்கு இவ்வளவுதான் கூலியாகத் தரப்படுகிறது. இப்படி அற்பக்கூலி கொடுத்துச் சுரண்டும் சுகுணா நிறுவனம், கறிக்கோழிகளை கிலோ ரூ.130 வரை விற்று கொள்ளை லாபத்தைச் சுருட்டுகிறது.
பொதுவாக கறிக்கோழி உற்பத்தியில் குஞ்சுகளின் தரம், தீவனத்தின் தன்மை மற்றும் மருத்துவச் சேவைகள் ஆகியவைகளே கோழியின் வளர்ச்சியைப் பிரதானமாக தீர்மானிக்கின்றன. இவையனைத்தும் சுகுணா போன்ற ஒப்பந்த விவசாய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. விவசாயிகளின் கட்டுப்பாட்டில் வெறும் கோழிக் கொட்டகை, குடிநீர், தினசரி பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் அவர்களது உழைப்பு மட்டுமே இருக்கிறது. கறிக்கோழி உற்பத்தியில் ஒரு நாள் வயது உள்ள தரமான கோழிக்குஞ்சு 50 கிராம் இருந்தால்தான் சீக்கிரம் எடை கூடும். ஆனால் 38 கிராம் எடை கொண்ட சுகுணா நிறுவனத்தின் குஞ்சுகள் தரமற்றவை. சுகுணா நிறுவனத்தின் தீவனத்தின் தரத்தைப் பொருத்த வரையில், இடுபொருட்களின் விலைக்கு ஏற்பவும், கறியின் விலைக்கு ஏற்பவும் தரம் மாறுபடுகிறது. உதாரணமாக, பறவைக் காச்சல் நோய் பரவி கோழிக்கறி விலை சரிந்தபோது, கோழிகளுக்கு தரம் தாழ்ந்த தீவனத்தை கொடுத்து தன் நட்டத்தை சுகுணா நிறுவனம் குறைத்துக் கொண்டது. கோழிகள் தீவனத்தை தின்றும்கூட எடை ஏறவில்லை. இதன் ஊடாக ஒட்டு மொத்த நட்டத்தையும் விவசாயிகளின் தலையில் அந்நிறுவனம் சுமத்தியது. வேறு காரணங்களால் சந்தை வீழ்ச்சியடையும் நேரங்களில், கோழிகளைக் காலம் தாழ்த்தி கொள்முதல் செய்வதன் மூலமாக இந்நிறுவனம் நட்டத்தை விவசாயிகளின் பக்கம் தள்ளுகிறது.
இன்னொரு பக்கம், சந்தை ஏறுமுகமா இருக்கும் காலகட்டத்தைக் கணக்கில் கொண்டுதான் அதற்கேற்ப இந்நிறுவனம் விவசாயிகளுக்குக் கோழிக்குஞ்சுகளைக் கொடுக்கிறது. குறிப்பாக, கறிக்கோழி வியாபாரம் இறங்குமுகமாக உள்ள புரட்டாசி மாதம் மற்றும் கோடைக் காலங்களில் இந்நிறுவனத்தால் கோழி உற்பத்தி திட்டமிட்டு நிறுத்தப்படுகிறது. 5000 கோழிகளுக்கு குறைந்த பட்சம் 4 முதல் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கொட்டகையைக் கடன் வாங்கி உருவாக்கிய விவசாயிகள், இப்படி பல மாதங்கள் கோழிகள் இல்லாமலே வெறுமனே கொட்டகை கிடப்பதால் பெருத்த நட்டத்தைச் சந்திக்கின்றனர். நட்டம் முழுவதும் விவசாயிக்கு; இலாபம் முழுவதும் சுகுணாவுக்கு. இந்த அநியாயத்தை எதிர்த்துக் கேட்காமல் இருக்க வெற்று பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி விவசாயிகளை இந்நிறுவனம் அறிவிக்கப்படாத கொத்தடிமைகளாக வைத்திருக்கிறது. இப்படி விவசாயிகள் நட்டப்பட்டு கறிக்கோழிகளை வளர்த்து சந்தைக்கு வருவதுதான் “சுகுணா சிக்கன்’’! விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டி உருவானதுதான் சுகுணாவின் “இளசான, மிருதுவான, தரமான சிக்கன்’’!
நீண்ட காலமாகக் குமுறிக் கொண்டிருந்த ஒப்பந்த விவசாயிகள், வளர்ப்பு கூலியா உயிருள்ள கறிக்கோழியின் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு குறைந்த பட்சமாக 3.50 ரூபாயும், 50 கிராம் எடை கொண்ட குஞ்சு, தரமான தீவனம், மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் முழுமையாக கொட்டகையைப் பயன்படுத்துவதற்குத் தொடர்ச்சியாகக் கறிக்கோழிக் குஞ்சுகளைக் கொடுக்கவேண்டும் எனவும்; வெற்றுப் பத்திரங்களிலும், காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி மிரட்டுவதை நிறுத்தக் கோரியும் சுகுணா நிறுவனத்துக்கு எதிராகப் போராடினர். சுகுணா நிறுவனமோ பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது, கோரிக்கைகளை நிறைவேற்றவும் முடியாது என்று திமிராக அலட்சியப்படுத்தியது. அரசோ கண்டும் காணாமலும் இருந்தது. விவசாயிகள் கோழிகளை பட்டினி போட்டு, இறந்த கோழிகளை சுகுணா அலுவலகத்தின் முன் கொட்டிய பிறகுதான், அதிர்ச்சியடைந்த அந்நிறுவனம் பேச்சு வார்த்தைக்கு வந்தது. சுகுணாவின் அடாவடித்தனத்தை எதிர்க்க வக்கற்ற அரசோ பேச்சுவார்த்தையில் நடுநிலை நாடகமாடியது. இறுதியில் சுகுணா நிறுவனம், உயிருள்ள கோழிக்கு எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு வளர்ப்புக் கூலியாக ரூ.3.50 தருவதாக ஒப்பு கொண்டதால் தற்காலிகமாகப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் இன்று வரை சுகுணா, பேச்சுவார்த்தையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை. போராடுகிற பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்குக் கறிக்கோழிக் குஞ்சுகள் கொடுப்பதையும் நிறுத்தியுள்ளது. மேலும் போராடும் விவசாயிகளை ஓரணியில் திரள விடாமல் பிரித்தாளும் சதிவேலைகளைச் செய்து வருகிறது.
தனியார்மய-தாராளமயக் கொள்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதால் தமிழக அரசோ, கால்நடை பராமரிப்புத் துறையோ அல்லது கால்நடை மருத்துவ பல்கலைக்கழகமோ கறிக்கோழி ஒப்பந்த விவசாய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் சூழலில் இல்லை. ஒப்பந்த விவசாயத்தில் பங்கேற்கும் விவசாயிகளின் பாதுகாப்பிற்காக எந்த ஒரு குறிப்பிட்ட சட்ட வரையறையும் இல்லை. இதுதான் பெருமையாகப் பீற்றிக் கொள்ளப்படும் ஒப்பந்த விவசாயத்தின் யோக்கியதை!
கூலி உழைப்பாளிகளை மட்டுமின்றி சிறு உடமையாளர்களையும் சுரண்டிக் கொழுத்து ஏகபோகத்தை நிறுவுவதுதான் முதலாளித்துவம். விவசாயம் நசிந்து போனதால், வேறுவழியின்றி கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்ட சிறு விவசாயிகளின் நிலம், நீர், உழைப்பைச் சுரண்டி போண்டியாக்கிவிட்டு, அவர்களைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளுவதான் ஒப்பந்த விவசாயத்தின் நோக்கம் என்பதை சுகுணா நிறுவனத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துக் காட்டிவிட்டது. இந்நிலையில், ஒப்பந்த விவசாயத்துக்கு அரசின் பாதுகாப்பைக் கோரும் போராட்டங்களோடு, தனியார்மய-தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக இதர பிரிவு உழைக்கும் மக்களுடன் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலம்தான், ஏகபோக கோழிப்பண்ணை நிறுவனங்களின் இரும்புப் பிடியிலிருந்து கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகள் விடுபட முடியும்.
பயனுள்ள தொழில்கள் 1 - கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பு
பொதுவாக கோழி வளர்ப்பில் இரு வகை முறைகள் பின்பற்றப்படுகின்றன.
கொட்டகை முறை
கோழி ஒன்றுக்கு 0.6-0.75 சதுர அஎ
அளவு வீதம் இருக்கும்படி கோழிக் கொட்டகை அமைக்கவேண்டும். இம்முறைதான்
நன்கு பலன் தரக்கூடிய கோழி வளர்ப்பு முறையாகும். கூரை ஒரு ஆஸ்பெஸ்டாஸ்
கொண்டு அமைக்கலாம். சிறு சிறு அறைகளாகத் தடுத்து ஓர் அறைக்கு 300
குஞ்சுகளுக்கு மிகாமல் வளர்க்கலாம்.
பயன்கள்
ஆழ்கூள முறை
இம்முறை உலகம் முழுவதம் பின்பற்றப்படும் முறை ஆகும்.
பயன்கள்
ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை
(ஆதாரம்: டாக்டர். பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வேளாண் கல்லூரி, மதுரை.)
தனிமையில் வளர்த்தல்
வணிக ரீதியில் அளவில் வைப்பதை
விடப் பெரிய பண்ணைகளே அதிக லாபம் தரக்கூடியவை, முட்டை உற்பத்திக்கு 2000
பறவைகள் கொண்ட பண்ணை அமைப்பு சிறந்தது. இறைச்சிக்கென வளர்க்கப்படும்
கோழிகள் வாரத்திற்கு 250 குஞ்சுகள் புதிதாக சேர்க்கப்படவேண்டும்.
கோழிகள்
கோழிக்குஞ்சுகள் வாங்கும் போது
நல்ல தரமானவைகளாகப் பார்த்து வாங்கவேண்டும். சில நாட்களான இளம் பெட்டைக்
குஞ்சுகளை வாங்குதல் நலம். இறைச்சிக்கென வளர்க்கும் கோழிகள் நன்கு
வளர்ந்து ஓடக்கூடிய நிலையில் இருக்கலாம்.
கோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை
இந்திய அரசு, பெங்களூர், மும்பை,
புவனேஸ்வர் மற்றும் டெல்ஹி ஆகிய நான்கு இடங்களில் முட்டை மற்றும்
இறைச்சிக் கோழிக்கான மாதிரி சோதனை ஆய்வகங்களை நிறுவியுள்ளது. இதன் மூலம்
வருடந்தோறும் பல இனக்கோழிகளை இவ்விடங்களில் வைத்துச் சோதனை செய்து
முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் சூழ்நிலைக்கேற்றவாறு இனங்களைத்
தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்.
இருக்க வேண்டிய எண்ணிக்கை கோழிகளில் இறப்பு, தேவையற்ற / பயனற்ற கோழிகளின் நீக்கம் போக ஒவ்வொரு பகுதியிலும் 1000 கோழிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதாவது 1000 கோழிகளுக்கு 1100 கோழிகள் தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். ஒரு நாள் வயதான இளம் கோழிக்குஞ்சுகள் 1100 வளரும் இளம் குஞ்சுகள் 1050, தயார் நிலையில் குஞ்சுகள் / கோழிகள் 1000 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும். இறைச்சிக்கான கோழிகளில் 6-7 வார வயதில் 250 கோழிகள் சந்தைக்கு அனுப்பத் தயார் நிலையில் இருக்கவேண்டும். |
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
- 2014 (1)
- 2013 (1)
- 2012 (2)
- October (3)
- September (3)
- August (1)
- July (3)
எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
ReplyDeleteCountry chicken
Aseel chicken
Chittang chicken
Kadaknath Chicken
ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.
suresh A- 9655783673. Tirunelveli (Dist)
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து கோழிகுஞ்சுகள் மற்றும் அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும்
ReplyDeleteதொடர்புக்கு -9944209238
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, எங்களிடம் தரமான நாட்டுக்கோழி குஞ்சுகள் கிடைக்கும். நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் நேரில் வந்து கோழிகுஞ்சுகள் மற்றும் அதன் தரத்தினை பார்த்து வாங்கி செல்லவும்
ReplyDeleteதொடர்புக்கு -9944209238