நோய்ப் பராமரிப்பு

 1.ராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்

வயது
நோய் தடுப்பு மருந்து செலுத்தும் வழி
முதல் நாள் மாரெக்ஸ் ஹச்.வீ.டி மருந்து தோலின் கீழ்
5-7 நாட்கள் ராணிக்கெட், எப் தடுப்பூசி / லசோட்டா எப் லசோட்டா எப் கண்ணில் (சொட்டு மருந்து)
10-14 நாட்கள் ஐபிடி உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி குடிதண்ணீர் மூலம்
24-28 நாட்கள் ஐபிடி உயிருள்ள இன்டர் மீடியம் ஐபிடி தடுப்பூசி குடிதண்ணீர் மூலம்
8வது வாரம் இராணிக்கெட் நோய் இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர் டுபி தடுப்பூசி இறக்கையில் தோலின் கீழ்
15-18 நாட்களில் இராணிக்கெட் நோய் உயிருள்ள இராணிக்கெட் ஆர்டிவிகே / ஆர்டுபி தடுப்பூசி / உயிரற்ற இராணிக்கெட் தடுப்பூசி இறக்கையில் தோலின் கீழ்

 2.குடற்புழு நீக்கம் செய்தல்

ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.]

3.வெளிப்புற ஒட்டுண்ணிகள்

ஏதேனும் வெளிப்புற ஒட்டுண்ணிகள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே, கொட்டகையை புகையூட்டம் செய்து, கோழிகளுக்கு மருந்து தூவுதல் வேண்டும்.

இறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை

வயது
நோய் தடுப்பூசி மருந்து செலுத்தும் வழி
0-5 நாட்கள் வெக்கை நோய் லசோட்டா (அ) எப் தடுப்பு மருந்து கண் / மூக்கு
10-14 நாட்கள் குடல் அழற்சி நோய் (IBD) ஐபிடி (உயிர்) குடிதண்ணீர்
24-28 நாட்கள் குடல் அழற்சி நோய் ஐபிடி (

நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்

ஆயிரக்கணக்கில் கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கும் போது நோய் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு இலாபகரமான கோழிப்பண்ணைக்கு திட்டமிட்ட நோய்க் கட்டுப்பாடு முறை இன்றியமையாததாகிறது. அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவுகின்றன.
  • ஒரு புதிய கோழிகளை கொட்டகையினுள் விடுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே கொட்டகையை சுத்தம் செய்து வைக்கவேண்டும்.
  • பழைய கோழியின் எச்சங்களை கூடிய சீக்கிரம் அகற்றிவிடவேண்டும். சுவர், மேல்கூரை போன்றவைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தவேண்டும்.
  • ஒரு நல்லக் கிருமி நாசினிக் கொண்டு இவையனைத்தையும் சுத்தம் செய்தல் வேண்டும்.
  • பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் கிருமி நாசினிக்  கொண்டு சுத்தம் செய்து உலர வைத்த பின்பே உபயோகிக்கவேண்டும்.
  • ஒளி எதிரொளிப்பான் மற்றும் வளி உமிழும் விளக்குகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவேண்டும். பயனற்ற விளக்குகளை  அகற்றி புதிய விளக்குகளைப் பொருத்தவேண்டும்.
  • எலி, நாய், பூனை போன்ற விலங்குகளை பண்ணைக்கருகே அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • பார்வையாளர்களை அதிகம் உள்ளே வராமல் தடுப்பது நன்று.
  • இறந்து போன கோழிகளை உடனே தொலைவில் கொண்டு சென்று புதைத்து விடுதல் வேண்டும்ட.
  • 1 சதவிகிதம் அம்மோனியாக் கரைசல் கொண்டு நீர் மற்றும் தீவனத் தொட்டிகளைத் தினமும் சுத்தப்படுத்த வேண்டும்.
  • உள்ளே செல்லும் பாதை அமைப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.
  • பண்ணையைச் சுற்றிலும் நல்ல சுகாதாரமான முறையைக் கடைபிடிக்கவேண்டும்.
  • ஈரமானக் கூளங்களை  உடனே நீக்கி புதிய கூளங்களை மாற்றவேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் கோழிகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா, இல்லை  சோர்ந்து ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தீவனமிடும்போதும் மற்றும் உள்ளே சென்று வரும் போதும் கவனிக்கவேண்டும்.
  • நல்ல உற்பத்தி நேரத்திலும் மற்றும் இதர அட்டவணை நேரப்படியும் குடற்புழுநீக்க மருந்து  அளிக்கவேண்டும்.
  • ஏதேனும் நோய்பரவல் அல்லது தாக்கம்  தெரிந்தால் உடனே  தேவையான நடவடிக்கைகளை உடனே
  •  

    பூஞ்சை நச்சு / காளான் நச்சு

    கோழிக்குஞ்சுகளின் தீவனத்தில் இப்பூஞ்சை நச்சு இருந்தால் அது முட்டை உற்பத்தி மற்றும் கோழி வளர்ச்சியைப் பாதிக்கிறது. இது கோழியின் முட்டையிடும் திறன், கருவுறுதிறனைப் பாதிக்கிறது. கோழிகளை விட இப்பூஞ்சை நச்சு வாத்துக்களை அதிகம் பாதிக்கிறது.
    எனவே தீவனங்களை இப்பூஞ்சை நச்சு தாக்காமல்  பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். ஈரப்பதம் 11 சதவிகிதம் மேல் இருந்தால் பூஞ்சை வளர்ந்து விடும். நன்கு தீவனங்களை உலர்த்துதல், காற்றுப் புகாத இடத்தில் வைத்தல், ஈரப்பதத்தைக் குறைத்தல் மூலம் தீவனத்தை பூஞ்சை பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம். நச்சுக் கட்டுப்பாட்டு மருந்து அல்லது பூஞ்சைத் தடுப்பு மருந்துகளைத்  தீவனத்தில் கலப்பதும் சிறந்தது.

    கிருமிநாசினிகளும் பயன்பாடும்

    1.லைசோல்
    1-2 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தலாம். கோழிப்பண்ணையில் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகள், நடக்கும் பாதை போன்றவற்றைச் சுத்தம் செய்யச் சிறந்தது.

    2.சுண்ணாம்புப் பொடி

    சுவர்களைச் சுத்தம் செய்யப் பயன்படும் மலிவான கிருமிநாசினி 2-5 சதவிகிதம்
    லாசோட்டா வெள்ளைக் கழிச்சல் (தேவைக் குறிப்புகள்)
    குடிநீரில் கலந்து 20வது வாரம்
    லாசோட்டா (தேவை ஏற்படின்) குடிநீரில் கலந்து 40வது வாரம்
    கரைசல் கொண்டு சுவர்களுக்கு வெள்ளையடித்தல் பல்வேறு வகை தொற்றுக் கிருமிகளை நீக்கக்கூடியது. தோலில் பட்டால் அரிப்பை ஏற்படுத்தும்.

    3.சலவை சோடா

    இது கோழிகள் இல்லாத வீட்டின் தரையை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது.

    4.ஃபினால்

    நச்சுத்தன்மை குறைவு ஆனால் விலை அதிகம் 2-4 சதவிகிதம் கரைசலைப் பயன்படுத்தி வீடுகளையும், கருவிகளையும் சுத்தப்படுத்தலாம்.

    கோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்

    மருந்தின் பெயர்
    செலுத்தும் வழி கோழியின் வயது
    லாசோட்டா எஃப் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்பு மருந்து மூக்கு 3-7 நாட்களில்
    கோழி வாத நோய் தடுப்பு  மருந்து (குஞ்சு பொரிப்பகத்தில்)
    1 நாள்
    மூச்சுக் குழல் அழற்சி மருந்து (முதல் வேளை) கண்களில் 2-3 வாரங்கள்
    லா சோட்டா வெள்ளைக் கழிச்சல் மருந்து குடிநீரில் கலந்து 5-6 வாரங்கள்
    கோழி அம்மை
    (முதல் வேளை)

    7-8 வாரங்கள்
    ஆர்2பி வெள்ளைக் கழிச்சல்
    9-10 வாரங்கள்
    ஆர்2பி வெள்ளைக் கழிச்சல் மூச்சுக் குழல் அழற்சி மருந்து கண்கள் / குடிநீரில் கலந்து 16 வாரங்கள்
    கோழி அம்மை
    (2வது தடவை)

    18வது வாரங்கள்
    கூடானது  அறை போல இருட்டாகவும், நல்ல காற்றோட்டத்துடன் கட்டிடத்தின் ஏதேனும் ஒரு ஓரத்தில் அமைந்திருக்கவேண்டும். கூடுகள் மலிவான மரத்தாலான 30x30x40 செ.மீ அளவில் அமைந்திருக்கலாம். சுத்தமான 1 கூடு என்றவாறு அமைக்கலாம். சுத்தமான கூடுகளைப் பயன்படுத்தி அவற்றை அவ்வப்போது மாற்றவேண்டும். தேவைப்படின் கூளங்களை மாற்றிவிடவேண்டும்.

6 comments:

  1. எங்களிடம் அனைத்து வகையான கோழிகளும் அசல் தரத்துடன் கிடைக்கும்.
    Country chicken
    Aseel chicken
    Chittang chicken
    Kadaknath Chicken
    ஒரு பண்ணை அமைக்க தேவையான நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும்
    நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

    suresh A- 9655783673. Tirunelveli (Dist)

    ReplyDelete
    Replies
    1. கருங்கோழி தேவை படுகிறது

      Delete
  2. தண்ணீரில் மருந்தை எவ்வாறு கலப்பது

    ReplyDelete
  3. kozhikalukana marunthu kidaikkum idam chennail engu ullathu??

    ReplyDelete
  4. வெள்ளை கழிசல் நோய்க்கு லசோட்டா மருந்து தஞ்சாவூரில் கிடைக்கும் இடம் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.

    ReplyDelete
  5. NATTU KOZHI CHICKS DAY OLD & MONTH OLD AVAILABLE PLACE POLLACHI CALL.7601899262

    ReplyDelete